Sunday, March 6, 2011

இணையத்தளமூடக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க

கோப்புக்களின் வகைகளை (File types)  அவற்றின்  Extension  ஐ கொண்டு அறிய..
file extesion
extensionfile
கோப்புக்களின் வகைகளை (File types)  அவற்றின்  Extension ஐ கொண்டு அறிய ஒரு அருமையான இணைய தளம் உண்டு.
அதாவது Psd, mp3, mov என்பவற்றில் உள்ள மூன்று எழுத்து வடிவங்களை வைத்து ஒருகோப்பின் வடிவத்தை தீர்மானிக்கலாம்.
ஒரு குறிப்பிட்ட கோப்பின்வகை (File type) நாம் அறிந்திருக்காவிட்டால் (unknown type) அல்லது  நமது கணினியில் இருக்கும் அல்லது மின்னஞ்சலிலோ வரும் சில கோப்புகள் (Files)  எமக்கு எல்லாம் கேள்விப்பட்டதாக தெரிவதில்லை. இதை வைரஸ் என சில வேளைகளில் நாம் பயப்படலாம்.
ஆனால் அதன்  Extension ஐ கொண்டு எந்த  கோப்புவகை (File types) என கண்டுபிடித்து மேலதிக தகவல்களை பெற ஒரு தேடுபொறி உள்ளது (Search Engine).
இந்த தளத்திற்கு சென்று Extension ஐ மட்டும் கொடுத்து தேடினால் போதும் உடனே அதைப்பற்றிய சகல விபரங்களையும் அறியத்தரும்.
இங்கு சுமார் 2000 க்கு மேற்பட்ட Extension க்குரிய பதிலை தளம் கொண்டுள்ளது. ( File extension database currently contains information about 2,059 file extensions and is growing daily. )
( If the file extension in question is not in our database yet you will be redirected to form that will allow you to submit new file extensions for our researchers to look at and add to the database.)
தளமுகவரி : http://extensionfile.net/database
———————————————————————————————————————————————————-
———————————————————————————————————————————————————-
விண்டோஸ் 7 உபயோகிப்பவர்களுக்கான ஜிமெயில் நோட்டிபையர் ( Gmail Notifier Plus)
Gmail Notifier Plus
Gmail Notifier Plus
gmail-notifier
gmail-notifier
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விண்டோஸ் 7 ( Windows 7) உபயோகிப்பவர்களுக்கான ஜிமெயில் நோட்டிபையர்( Gmail Notifier Plus) வெளியிடப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 பாவிப்பவர்கள் இதைபயன்படுத்தி பார்க்கலாம்.
தரவிறக்க சுட்டி:
http://staff.neowin.net/rob/gnp-12.zip
———————————————————————————————————————————————————-
———————————————————————————————————————————————————-
ப்ளுடூத் (Bluetooth) மென்பொருள் இல்லாத கணனியில்…கோப்புக்களை (files) இடமாற்ற…

Bluetooth File Transfer wizard
Bluetooth File Transfer wizard

ப்ளுடூத்(Bluetooth) மென்பொருள் இல்லாத கணனியில் கோப்புக்களை (files) இடமாற்ற( Transfer) செய்ய ஒரு விசேட வழி உண்டு…
இது யாருக்கும் தெரியாமல் மறைந்து கிடக்கிறது.
விண்டோசில் (Windows XP) மறைந்து இருக்கும் ப்ளுடூத்(Bluetooth) மென்பொருளை கண்டுபிடிக்க இதோ வழி………………..
start சென்று Run  இல் fsquirt என தட்டச்சு செய்து Enter கொடுங்கள் (start—> Run)
இப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும். இந்த wizard ஐ பயன்படுத்தி
உங்கள் Bluetooth சாதனத்தில் (Device) இல் கோப்புக்களை இடமாற்றம் செய்யலாம்.
———————————————————————————————————————————————————
———————————————————————————————————————————————————

இணையத்தில் பகிர்ந்து கொள்ள…


Mirror-Creator
Mirror-Creator

Mirrorcreator share
Mirrorcreator share
இணையத்தில் கோப்புக்களையோ (Files) அல்லது அதிகளவான படங்கள் மற்றும் மென்பொருட்களை (Softwares) பகிர்ந்து கொள்ள இந்த தளத்தை பயன்படுத்தலாம்.
ஒரே நேரத்தில் பல தளங்களுக்கு தரவேற்றப்படுகிறது (Uploading).
பின்னர் அதற்குரிய இணைப்புக்களை (Links) பெற்றுக்கொள்ளபடுதல் மூலம் அதை மற்றவர்களுக்கு  பகிர்ந்து(share) கொள்ளலாம். பின்னர் தேவை ஏற்படும் போது  உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குறிப்பிட்ட இணைப்புக்கள்( Links) மூலம் தரையிறக்கி கொள்ளலாம்(Download).
ஆகக்கூடியது 100MB அளவு தரையேற்றலாம்.(Upload).
சில நாடுகளில் சில இணைப்புக்கள்  ( Links ) தடைசெய்யப்பட்டு இருந்தால் இதன் மூலம்  கோப்புக்களை(Files) பரிமாறிக்கொள்ளலாம்.
தளத்தின் இணைய முகவரி   http://www.mirrorcreator.com/
———————————————————————————————————————————————————-
———————————————————————————————————————————————————-
பெரிய (1GB) கோப்புகளை (File) அனுப்ப…
file

நாங்கள் ஒரு பெரிய கோப்புக்களை (File) மின்னஞ்சலில் அனுப்ப மிகவும் தடுமாறுகிறோம்..ஒரு கட்டணம் செலுத்தாமல் yahoo,  gmail, hotmail போன்றவை 10MB க்கு மேல் பொதுவாக அனுமதிப்பதில்லை.
அதற்கு மிகப்பெரிய வசதிகளை தருகிறது கட்டணம் செலுத்தாத ஒரு தளம் SendTool என்ற தளம் இதற்கு உதவிபுரிகிறது.
SendTool மூலம் உங்கள் கோப்புகளையும்(File) படங்களையும் ஏற்றிவிட்டு( upload) கிடைக்கும் தரையிறக்க சுட்டிகளை( Download link) மட்டும் நண்பருக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்..
இங்கு கடவுச்சொல் வசதியும் உண்டு (password)
http://sendtool.com/
SendTool eliminates the limitations of sending email attachments.
Send files of any type and any size (up to 1GB).After submitting the form above, you will receive a download link that anyone can use to download your file.
—————————————————————————————————————————————————
—————————————————————————————————————————————————
கடவுச்சொல் பாதுகாப்பு வலிமை
The Password Meter
இணையத்தில்( internet) நாம் பலதரப்பட்ட கடவுச்சொற்களை (Password) ஒவ்வொரு தேவைக்கும் பயன்படுத்துகின்றோம்.
மின்னஞ்சலுக்காவும், சில தளங்களை பார்வையிடமும் கருத்துக்களை தெரிவிப்பதற்காகவும் பிரத்தியோக
துரும்புச்சீட்டாக கடவுச்சொல் பயன்படுகிறது
அதிகமானவர்கள் தமக்கு பிடித்தமானவர்களின் பெயர்களை கடவுச்சொல்லாக பயன்படுத்துவர்.
ஒரு வலிமையான சொல்லை உருவாக்கி இணையத்திருடர்களிடம் நமதுதனிமனித உரிமையை பாதுகாக்கலாம்.
கடவுச்சொல்லின் வலிமையை சோதிப்பதற்காக ஒரு தளம் இருக்கின்றது.
அதற்கு THE PASSWORD METER  என்று பெயர்.
தள முகவரி:     http://www.passwordmeter.com
உங்கள் கடவுச்சொல்லில் (password) குறைந்தது ஒரு எண்ணும், ஒரு பெரிய எழுத்தும் (Uppercase Letter), ஒரு சிறிய எழுத்தும் (Lowercase Letter), ஒரு அடையாளக்குறி (Symbols) சொல்லும்  இருக்கவேண்டும்.
குறைந்தபட்ச எழுத்துக்களின் எண்ணிக்கை எட்டு ஆகும்.
———————————————————————————————————————————————————
———————————————————————————————————————————————————
கூகிழ் – மொழி பொறிமுறை மொழிபெயர்ப்பு
translate_beta_res
பொறிமுறை மொழிபெயர்ப்பு என்பது மென்பொருளைப் பயன்படுத்தி உரையை அல்லது பேச்சை மொழிபெயர்ப்பது ஆகும். இது இன்னும் வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நுட்பம்.
தற்பொழுது பல மொழிகளுக்கான பொறிமுறை மொழிபெயர்ப்பு உண்டு. கூகிழ் மொழிக் கருவிகள்( Google Language Tools) பல ஐரோப்பிய மொழிகள், சீனம், கொரியன், அரேபிக், இந்தி மொழிகளுக்கு இடையே மொழி பெயர்ப்பை ஏதுவாக்கின்றது.
நீங்களும் மொழிபெயர்த்து பாருங்களேன்  …
http://www.google.com/language_tools
(Type a search phrase in your own language to easily find pages in another language.)
மற்றும் சொற்பக்கங்களை அல்லது இணயத்தளத்தை கூட மொழிபெயர்ப்பு செய்யலாம்(Translate text or webpage)
http://translate.google.com/translate_t?hl=en#
தமிழுக்கும் மற்ற திராவிட மொழிகளுக்கு இடையேயான பொறிமுறை மொழிபெயர்ப்பு நான் எழுதும்வரை விருத்திசெய்யப்படவில்லை
——————————————————————————————————————————————————
——————————————————————————————————————————————————-
இணையத்தளமூடக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க….

TweetMyPC
TweetMyPC


TweetMyPC
TweetMyPC

*****************************************************************************
TweetMyPC நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டுக் கணினியை இயக்குவதை சாத்தியமாக்கிறது.
இணையத்தளமூடக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க இது உதவுகிறது இந்தTweetMyPC .
TweetMyPC வேறு இடத்தில் நீங்கள் இருந்தாலும் Twitter ஊடாக உங்கள் கணினியை இயக்க உதவுகிறது.
1. இதற்காக வெறுமேனே உங்கள் கணினியில் இந்த செயலியை தறவிறக்கம்( Download) செய்யவும்..
2. பின்னர் www.Twitter.com என்ற தளத்துக்கு சென்று புதிய டியூட்டர் (Twitter) கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும். இக் கணக்கு TweetMyPC க்கு மட்டும் பிரத்தியோகமானது
{Go to www.Twitter.com and create a new Twitter account for your PC (This is optional as TweetMyPC only responds for updates). This account will be used by TweetMyPC to monitor for new tweets}
3. உங்கள் பயனாளர் கணக்கை பெயர் , கடவுச்சொல் கொடுத்து  TweetMyPC இயக்கவும்.  சற்று தாமதித்து இரட்டை சொடுக்குகள் மூலம் Twitter ஐ இயக்கி TweetMyPC ஐ ஆரம்பிக்கவும்.
{Start TweetMyPC and then fill in the login details. Wait for some time for the application to verify your login details & Double click the Twitter Icon to start TweetMyPC }
அதே பயனாளர் கணக்குடன் எங்கிருந்தாவது உள் நுளையும்போது உங்கள் கணினியை நிறுத்தவோ ( Shutdown ) செய்யவோ மீள் ஆரம்பம்(Restart) செய்யவோ முடிகிறது.
சிறுவர் கூட இதை எளிதாக செயல்படுத்தலாம்
http://tweetmypc.en.softonic.com/
http://tweetmypc.codeplex.com/Release/ProjectReleases.aspx?ReleaseId=26541

No comments:

Post a Comment