Sunday, March 6, 2011

2011 video

கையடக்க / செல்லிட  தொலைபேசியில் (Mobile/Cell phone)  தமிழ் இணையத்தளங்களை பார்க்க..

Opera Mini
Opera Mini
nillal @ opera
nillal @ opera
********************************************************************************
தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை இதோ…….
1. உங்கள் கையடக்க செல்லிட தொலைபேசியில் ( mobile phone) GPRS வசதியை உயிர்ப்பித்து(Active) கொள்ளவும்.
2.  கையடக்க தொலைபேசி மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி ( Download) உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
3. கையடக்க தொலைபேசியில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை ( browser) திறந்து கொள்ளுங்கள்.
4. பின்பு முகவரி இடும் இடத்தில் (Address Bar)  opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
5. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
(if enabled, text written with complex scripts will be rendered on the server instead of in your device.)
6. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
இனி உங்கள்  கையடக்க தொலைபேசியில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றி பார்க்கலாம்.
———————————————————————————————————————————————————
மொட்சிலாவின் Fennec Browser.

மொட்சிலா Fennec
மொட்சிலா Fennec
Fennec mobile Browser
Fennec mobile Browser

****************************************************************************************************
மோசில்லா( mozilla) நிறுவனமானது  செல்பேசி / கையடக்கதொலைபேசிக்கான (mobile phone browser ) இணைய உலாவியை புதிதாக வெளியிட்டுள்ளது.
அதற்கு பெயர் : Fennec Browser. { The name of the browser comes from a Fennec Fox, a small desert fox (just as the Fennec Browser is a small version of Firefox browser)}
Fennec browser alpha 2 நிலை வெளியிடப்பட்டுள்ளது.
இயங்கும் நிலை (Operating system):  Linux, Windows Mobile 6
இது Windows Mobile (விண்டோஸ் மொபைல்)  , Symbian OS  ,
Nokia Maemo based N800/N810 devices, மற்றும் Mac OS X and some Linux distributions போன்றவற்றுக்கு ஒத்துழைக்க கூடியது.
இந்த பதிப்பில் உருவாக்கப்பட்ட வசதிகள் சில:
1. ஒரே நேரத்தில் பல தளங்களை பார்க்கும் வசதி (multiple sites at once)
2. சிறப்பான நினைவக பயன்பாடு
3. CSS அடிப்படையிலான வடிவமைப்பு மற்றும் Add-ons வசதி
4. தொடுகை அடிப்படையிலான ( touch-enabled interfaced ) தெரிவு
5  ஒரு சொடுக்குவையில் நினைவுப்பக்கம் (One-click bookmarking to quickly organize websites)
மேலதிக விபரங்களுக்கு :
https://wiki.mozilla.org/fennec#About_Fennec
http://www.mozilla.org/projects/fennec/1.0a2/releasenotes/
https://wiki.mozilla.org/Mobile/FeatureList
http://blog.mozilla.com/blog/2009/06/26/new-fennec-releases-available/
——————————————————————————————————————————————————–

fring  ……இது VOIP தந்திரம்


fring
fring



எப்படி வேலை செய்கிறது
எப்படி வேலை செய்கிறது

fring வசதிகள்
fring வசதிகள்


உலகத்தின் இருமூலைகளில் இருக்கும் இரு கணினிகள் – அவை இணையத்தில் இணைக்கப் பட்டிருந்தால் நாம் குரல்வழி ( voice chat) மூலம் எளிதாக இலவசமாக பேசிக்கொள்ள முடியும். இது நாம் யாவரும் அறிந்த பழைய தொழில்நுட்பமே.
அந்த மாதிரியான குரல்வழி ( voice chat)  இணைப்புக்கு MSN Messenger, Yahoo Messenger ,Google Talk, ICQ, Skype முதலான மென்பொருட்கள் உதவுகின்றன. அப்படியே அது வழியாய் நாம் சர்வதேச இலவச அழைப்புக்களும் செய்யலாம். ஆனால் என்ன இரு முனைகளிலும் கணினி மற்றும் இணையம் உங்களுக்குத் தேவைப்படும். கணினி பக்கத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும்.அதுவும் ஒரு தொல்லைதானே !
இன்றைக்கு வெளிவரும் பெரும்பாலான கையடக்கத்தொலைப்பேசிகள் ( mobile phone’s) ஒரு குட்டி கணினி போலவே செயல்படுகின்றன. அது வழியாய் இணையம் கூட மேயமுடிகின்றது.
USA இல் இருந்து i-phone வழி Yahoo Messenger-ல் நுழைந்து லண்டனில் உள்ளவருக்கு  N95 வழி Yahoo Messenger இன் மூலம் இருவரும் மணிக்கணக்கில் voice chat-ல் பேசிக்கொண்டே இருக்கலாம். இது சர்வதேச அழைப்பாகாது. அதாவது இங்கு நாங்கள் பேசும் போது தொலைப்பேசி நுட்பத்தை (Air time) பயன்படுத்தவில்லை. மாறாக VOIP எனப்படும் இணைய வழி தொடர்பையே பயன்படுத்துகின்றோம். இது உங்கள் Data Plan meter தான் கூட்டுமே தவிர தொலைப்பேசி கட்டணத்தைல்ல.
அமெரிக்காவில் AT&T “unlimited” Data Plan-னை மாதம் குறைந்த கட்டணத்தில் தருகின்றார்கள். Data Plan கட்டண கவலையின்றி மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம்.
ஒரு தகவலுக்கு எடுத்துக்கொண்டால் ஐபோன் ( iphone) வழி ஒருமணி நேரம் பேசினால் 8MB data  மட்டுமே பரிமாற்றம் (transfer)  ஆகியிருக்குமாம்.
இலங்கையில் Dialog, Mobital, Airtel,Tigo இணைப்புக்கள் 1KB க்கு 2 சதம் என்ற அடிப்படையில் கட்டணங்ளை அறவிடுகின்றன.
இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இந்தியாவில் உங்களிடம் இருந்தால் நீங்களும் இலவச சர்வதேச அழைப்புக்களை மேற்கொள்ளலாம் .மறுமுனை நபரிடமும் இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இருக்கவேண்டும்.அது 3G, GPRS, WiFi அல்லது EDGE என எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
இது ஒரு அருமையான தந்திரம். சர்வதேச தொலைபேசி சேவை நிறுவனங்கள் பல தொலைபேசி அட்டைகள்  கோடிகோடியாய் பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கும் போது இதை எப்படி சம்மாளிக்கப்போகின்றார்கள் என தெரியவில்லை.
மேற்கண்ட தந்திரத்தை செய்ய உதவும் மென்பொருளின் பெயர் fring. ( VoIP over 3G, GPRS and WiFi networks)
உங்கள் கைப்பேசிக்கான சரியான fring மென்பொருளை இலவசமாக இங்கிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம். http://www.fring.com/download/
fring ஆனது Skype®,Facebook, MSN® Messenger, ICQ®, Google Talk™, Twitter, AIM® , Yahoo!™, Last.fm போன்றவற்றை ஆதரிக்கிறது.
நீங்களும் இனி Skype தொலைபேசி உரையாடல்களை கையடக்கதொலைபேசியினுடாக ( mobile phone) செய்யலாம்.
இது  peer-to-peer VoIP தொழிநுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இப்பொழுது  Twitter 2.0 க்கு இசைவாக நடக்கும் வகையில் ( new Twitter 2.0 Add-on for fring) இருக்கிறது.

டியுட்டரில் ( Twitter ) செய்திகள் வரும் போது ஒலியை தந்து ( ringing tone) நினைவூட்டுகிறது.
டியுட்டரில் ( Twitter ) செய்திகளை கையடக்க தொலைபேசி  இரண்டு விதமாக கையாளுகிறது.
1. விண்டோஸ் மொபைலில் fring இல் உள்ள  Add-ons பகுதிக்கு சென்று பழைய Twitter ஐ unsubscribe செய்து பின்னர் re-subscribe செய்யவும்.
( Windows Mobile- just go to the Add-ons tab inside fring, unsubscribe from the old Twitter & re-subscribe to the new Add-on. )
2. Symbian மென்பொருளில் இயங்கும் கையடக்கதொலைபேசிகளில் ( e.g :Nokia, Sony Ericsson, Samsung) புதிய fring மென்பொருளை தரையிறக்கி ( download )  பழைய Twitter ஐ unsubscribe செய்து பின்னர் re-subscribe செய்யவும்.
( Symbian handset owner, simply download the new fring version 3.37 first, unsubscribe from the old Twitter & re-subscribe to the new Add-on)
http://www.fring.com/download/
நீங்கள் youtube இல் Fring பற்றிய விபரணத்தை அறிய www.youtube.com

No comments:

Post a Comment