Sunday, October 17, 2010

open office

குட்டி குட்டி ஐ.டி செய்திகள் 10!

1. சுதந்திர மென்பொருள் ஓபன் ஆபீஸ் 3.0 டவுன்லோடு லிங்க் இது வரை 5 கோடி முறை கிளிக் செய்யப்பட்டு இருக்கிறது.

2. கூகிள் மேப்ஸ் போன்றே, மைக்ரோசாஃப்ட், தான் வழங்கும் Live Maps சர்வீசுக்காக விமானத்தில் இருந்து பூமியை படம் பிடிக்க வசதியாக, 196 Mega Pixel திறனுள்ள ஒரு கேமராவை உருவாக்கியுள்ளது.

3. சுமார் 200 மில்லியன் (20 கோடி) பேர், சோஷியல் நெட்வொர்கிங் வலைதளமான “Facebook.com"-ஐ

பயன்படுத்துவதாக அந்த கம்பெனி அறிவித்துள்ளது. FaceBook வார்த்தையில் 8 எழுத்துக்கள் இருப்பதால் அதை ’F8’ என்றுகூட அழைக்கிறார்கள்.

4. Recession-ல் அடி வாங்கிய கம்பெனிகள், செலவைக் குறைக்க சுதந்திர மென்பொருட்களை (Free and Open Source Software)
பயன்படுத்தலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். Recession வந்ததிலிருந்து ஓபன் ஆபீஸ் டவுன்லோடு எண்ணிக்கை எகிறிக் கொண்டு இருக்கிறது. இப்ப புரியுதா?

5. United States of America-வில் மட்டும் சுமார் 1 கோடி பேர், ஓபன் ஆபீஸை பயன்படுத்துவதாக கணக்கிட்டு இருக்கிறார்கள்.

6. ஃப்ரான்ஸ் நாட்டு போலீஸ் டிபார்ட்மெண்ட், சுமார் 1 லட்சம் கணினிகளில் சுதந்திர இலவச மென்பொருளை பயன்படுத்துகிறது. ஓபன் ஆபீஸ், ஃபயர்ஃபாக்ஸ் ருசி கண்ட இவர்கள் போட்ட புது உத்தரவு - “புது கணினி வேணுமா, உபுண்டு லினக்ஸோடுதான் வரும். சரியா?”

7. மலேசிய அரசு சுமார் 10,000 கணினிகளில் ஓபன் ஆபீஸ் பயன்படுத்தி US $ 12 மில்லியனை சேமித்துள்ளது.

8. வியட்நாம் அரசு தன் அரசு அலுவகங்களில், 2009 வருட முடிவுக்குள் சுதந்திர மென்பொருட்களை அதிகமாக பயன்படுத்த முடிவு எடுத்து உள்ளது.

9. அமெரிக்க அரசுக்கு ஐடியா கொடுக்கும் ஒரு வலைத்தளத்தில், சாஃப்ட்வேருக்கு பேடண்ட் கொடுக்காதீர்கள். அப்படி கொடுத்தாலும் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு source code-ஐ பொதுச் சொத்து ஆக்கி விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

10. ஓபன் ஆபீஸை அடிப்படையாகக் கொண்டு Lotus Symphony, Oxygen Office, Neo Office, Go-oo, Red Office, Euro Office போன்ற office suites வருகின

4 கோடி முறை டவுன்லோட் செய்யப்பட ஓப்பன் ஆபீஸ் 3


ஓப்பன் ஆபீஸ் ஒரு சுதந்திர மென்பொருள் (Free and Open Source Software).

இது வரை ஏதோ பத்தோட பதினொன்னா இருந்த ஒப்பன் ஆபீஸ், Version 3 வந்த உடனே நிறைய பேரை திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது.

இது வரை 4 கோடி பேர் டவுன்லோட் லிங்க்கை கிளிக் செய்து இருக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

அத்தனை முறை மொத்தமாக டவுன்லோட் ஆகி விட்டதா என்று கேட்காதீர்கள். டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து, அப்புறம் அம்போன்னு விட்டதும் இதுலே சேர்த்தி.

இப்படி பார்த்தா, ஒரு முறை டவுன்லோட் செய்து, ஆபீஸ் முழுக்க 1000 கணினியில் இன்ஸ்டால் செய்தாலும் ஒரு எண்ணிக்கைதான் கணக்கு.

இதைத்தவிர மாத இதழ்களில் கூட வரும் CD அல்லது DVD-யில், இன்னும் எத்தனையோ Copies மக்களை போய் சேர இருக்குறது.

லினக்ஸ் Distribution-களில் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் ஓப்பன் ஆபீஸ் சேர்ந்து வருகிறது.


MS Office செய்யும் 90 சதவீத அடிப்படை வேலைகளை (Basic works) ஓப்பன் ஆபீஸ் செய்யுதுன்னு சொல்றாங்க.

MS Office-ல்தான் மைக்ரோசாஃப்டுக்கு நல்ல வருமானம்.


இன்று வரை ஓப்பன் ஆபீஸ் டவுன்லோட் கணக்கு தெரிந்து கொள்ள, இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment