Sunday, October 17, 2010

தொழில்நுட்ப செய்திகள்

"டாடா பைபை" IT செய்திகள்

இலவச சோலாரிஸ் OS - நிறுத்திய ஆரகிள்



லினக்சின் போட்டியை சமாளிக்க சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் தனது சோலாரிஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ள அனுமதி அளித்திருந்தது. சன்னிடம் முறையாக பதிவு செய்துவிட்டு, அதை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆரகிள் நிறுவனம் சன் மைக்ரோசிஸ்டத்தை சமீபத்தில் வாங்கியது. ஆரகிள் இனிமேல் சோலாரிஸ் 10 டவுன்லோடு செய்பவர்கள் 90 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று சொல்லி சோலாரிசை டிரையவேராக (Trialware) மாற்றி விட்டது. 90 நாட்களுக்கு மேலும் பயன்படுத்தவேண்டும் என்றால் ஆரகிளிடம் பணம்கொடுத்து சப்போர்ட் காண்டிராக்ட் வாங்கிக்கொள்ள வேண்டும்.

ஆனால் வணிக நோக்கில்லாத பெர்சனல் உபயோகத்திற்கு சோலாரிஸை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். சோலாரிஸ் சுதந்திர மென்பொருள் அல்ல.


ஓப்பன்சோலாரிஸ் OS சிடி இனிமேல் இலவசம் இல்லை

https://shipit.ubuntu.com/ போய் பதிவு செய்தால் வீட்டிற்கே இலவச உபுன்டு சி.டி வருவது போல் ஓப்பன்சோலாரிஸ் இயங்குதள சி.டியும் இலவசமாக வந்துகொண்டு இருந்தது. சன்னை வாங்கிய ஆரகிள் அதற்கும் ஆப்பு வைத்துவிட்டது. இனிமேல் அந்த சிடி இலவசமாக வீட்டிற்கு வராது.

ஆனால் சுதந்திர மென்பொருள் ஓப்பன்சோலாரிஸை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளலாம்.


சோனி PS3-ல் லினக்சுக்கு இடம் இல்லை

முதல் தலைமுறை (Non-slim) சோனி பிளேஸ்டேஷன் 3 கருவி வீடியோ கேமிற்காக தயாரிக்கப்பட்டு இருந்தாலும், அதில் இருந்த Install other OS என்ற வசதியை பயன்படுத்தி அதில் லினக்ஸை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வழி இருந்தது.

இந்த PS3-க்கு புதிய Firmware (நம்ம கம்ப்யூட்டர் BIOS மாதிரி) வெளியிட்ட சோனி, அந்த Firmware அப்கிரேடுக்குப் பிறகு PS3-ல் லினக்ஸ் இன்ஸ்டால் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டது. 
 

bIT bIT IT செய்திகள்


"Freemium" கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

அது வேறு ஒன்றும் இல்லீங்க. Free + Premium = Freemium.


இந்த புதிய வார்த்தை Web 2.0 கம்பெனிகளின் தாரக மந்திரமாக திகழ்ந்து வருகிறது.


அடிப்படை வசதிகளை இலவசமாகவும், மற்ற சிறப்பு/அதிக/விரும்பத்தக்க வசதிகளுக்கு கட்டணம் நிர்ணயித்தும் நடத்தப்படும் ஒரு Business Model-தான் இந்த Freemium.


இதற்கு பல உதாரணங்களை காட்டலாம். எளிதான ஒன்று இதோ.


Box.net
வலைத் தளத்தில் 1 GB வரை இலவசமாக ஃபைல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். 1 GB-க்கு மேல் இடம் தேவை என்றால் பணம் கொடுக்க வேண்டும்.

நண்பர்களோடு அரட்டை அடிக்கும்போது “அது Freemium வெப்சைட்டுன்னு சொன்னாங்களே! ” என்று ஒரு பிட்டு போட்டு அவங்களை குழப்பி, கொஞ்ச நேரம் ரசிக்கலாம். அதுதான் என் ஸ்டைல்.



ஓபெரா (Opera ) இலவச இணைய உலாவியின் Version 10 வெளியாகி உள்ளது. Extension எதுவும் தேவைப்படாத அளவுக்கு நிறைய வசதிகளை உலாவியிலேயே (Browser) சேர்த்து இருக்கிறார்கள். Visual Tabs வசதியை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

இது விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் பல இயங்குதளங்களுக்கும் (Operating Systems) கிடைக்கிறது.
டவுன்லோட் சுட்டி.

ஆகஸ்ட் 2009-ல் எடுத்த கணக்குப்படி இணைய உலாவிகளின் (Web Browser) பங்குச் சந்தை விகிதம்

ஓபெரா சுமார் 2%

கூகிள் குரோம் சுமார் 3 %
ஆப்பிள் சஃபாரி சுமார் 4 %
மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் சுமார் 24%
மைக்ரோசாஃப்ட் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் சுமார் 67%


கூகிள் குரோம் உலாவியை வெளியிட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஒரே வருஷத்தில் வெர்ஷன் 3-க்கு தூக்கிகிட்டு போயிட்டாங்க. மற்றபடி என்னத்த சொல்ல?

லினக்ஸ், மேக் (Apple Mac) வெர்ஷன் இன்னும் வரவில்லை. ஃபயர்ஃபாக்ஸில் இருக்கும் Add-on/Extension வசதி இன்னும் இதில் வரவில்லை.


ஃபயர்ஃபாக்சுக்கு இணையாக வரவே ரொம்ப நாளாகும் போல இருக்கிறது.

அமிதாப் பச்சனுக்கு Big B-ன்னு செல்லப்பேர்.
அப்போ நம்ம கூகிளுக்கு என்ன செல்லப்பேர் வைக்கலாம்.

Big G.

சுட்டி சுட்டி IT செய்திகள்

ஃபயர்ஃபாக்ஸ் (Firefox) ஒரு சுதந்திர மென்பொருள் (Open Source Software) என்று தெரியாமலேயே நிறைய பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

அறிமுகமாகிய ஐந்து வருடத்திலேயே
ஒரு பில்லியன் முறை (நூறுகோடிகள் - 1,000,000,000 - ஒன்னு போட்டு 9 சைபர். தலை சுத்துதுப்பா!) டவுன்லோடு செய்யப்பட்ட ஃபயர்ஃபாக்ஸ் அந்த சந்தோஷ தருணத்தை கொண்டாட http://www.onebillionplusyou.com/ என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து இருக்கிறது.

மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின்
எதிரி No.1 நம்ம ஃபயர்ஃபாக்ஸ்தான்.

ஃபயர்ஃபாக்ஸை, மக்கள் தாமாகவே முன்வந்து
ஆசையாக பயன்படுத்துவது, சுதந்திர மென்பொருட்களின் எதிர்காலத்தைப் பற்றி நமக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இப்பவே அடுத்த பில்லியன் டவுன்லோடுகளுக்கு ரெடியாகிக் கொண்டு இருக்கிறார்கள்.


நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன்”னு லினக்ஸ், ஃபயர்ஃபாக்ஸை பார்த்து ஜாலியாக பாட்டு பாடிக் கொண்டு இருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------

ஸ்மார்ட்ஃபோன் வாங்க போறீங்களா?

பாவம் பார்க்காமல் பேரம் பேசுங்கள்! ஏன்?



ஃபின்லாந்தை தலைமையிடமாக கொண்ட நோக்கியா 2008-ம் வருடம் செல்போன் விற்பனையில் 46 % (Unit terms) சந்தைப்பங்கை பெற்று 55% லாபத்தை அடைந்துள்ளது.

Smartphones என்று அழைக்கப்படும் ஐஃபோன் தயாரிக்கும் ஆப்பிளுக்கும், ப்ளாக்பெர்ரி (Blackberry) தயாரிக்கும் கனடாவின் ரிசர்ச் இன் மோஷன் (Research in Motion) கம்பெனிக்கும் மொத்த எண்ணிக்கையில் (Unit terms) வெறும் 3 % சந்தைப்பங்குதான். ஆனால் லாபத்தில் 35% பங்கு இந்த இரண்டே பேருக்குத்தான் (அவ்வ்வ்..) (
Lion's Share). (எல்லா %-ம் உலக அளவில்).

Source: Wall Street Journal.


சில பேர் யார் தலையில் நன்றாக மிளகாய் அரைக்க முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.



எல்லாம் "F" மயம்.


சோஷியல் நெட்வொர்க்கிங் தளமான
Facebook.com-ன் உலக அளவிலான உறுப்பினர்கள் எண்ணிக்கை ஜூலை 2009-ல், 250 மில்லியனை (25 கோடிகள்) தொட்டுவிட்டது. மூன்றே மாதத்தில் 50 மில்லியன் பேர் (5 கோடி பேர்கள்) புதியதாக சேர்ந்து இருக்கிறார்கள்.

Facebook, சோஷியல் மீடியா மற்றும் உடனடி செய்தித் திரட்டி வகை வலைத்தளமான
Friendfeed.com-ஐ சமீபத்தில் வாங்கியுள்ளது.

இரண்டு கம்பெனிகளின் லோகோவையும் பார்த்தால் ஒரே
F-ஆ இல்லே இருக்கு. எது எப்படியோ! கம்பெனியை வாங்கிய பிறகு "E" ஓட்டாமல் இருந்தா சரி!

பில் கேட்ஸ் வீட்டில் iPod, iPhone-க்கு தடை+ மற்ற IT செய்திகள்


1. உலகமே விருப்பத்துடன் பயன்படுத்தும் ஆப்பிளின் ஐபோட்(iPod), ஐஃபோன்(iPhone) மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் வீட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் பசங்க (2 பெண்கள், ஒரு பையன்) ஆசைப்பட்டு கேட்டாகூட கிடையாது.

இதை நான் சொல்லலைங்க! பில் கேட்ஸ் மனைவி மெலிண்டா கேட்ஸே Vogue பத்திரிகைக்கு கொடுத்த ஒரு பேட்டியில் சொல்லி இருக்காங்க!


தன் ஃப்ரெண்ட்ஸ் வைத்திருக்கும் ஐஃபோன்களை திருமதி. பில் கேட்ஸ் பார்த்துட்டு, நமக்குன்னு ஒன்னு இல்லையே என்று ரொம்பத்தான் ஏங்கிப் போய் கிடக்கறாங்க.


2. இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 பயன்படுத்துபவர்களுக்கு $10,000 பரிசை தர மைக்ரோசாஃப்ட் முன்வந்துள்ளது. IE8-ல் மட்டுமே தெரியும் மாதிரி ஒரு web page-ஐ உருவாக்கி மறைத்து வைத்துள்ளது.



Twitter-ல் அது தொடர்ந்து தரும் clue-க்களை வைத்து அந்த webpage-ஐ முதலில் கண்டுபிடிப்பவருக்கே அந்த $10,000 சொந்தம். 19 ஜூனில் இருந்து அந்த போட்டி நடந்துகொண்டு இருக்கிறது.

மேற்கொண்டு விவரங்களுக்கு
http://www.tengrandisburiedhere.com/ பாருங்கள்.

“சொக்கா! இந்த பரிசு எனக்கில்லே. எனக்கில்லே.”



3. ஒரு ஆய்வில், சுமார் மூன்றில் இரண்டு பேர், கம்பெனி கொடுத்த லாப்டாப்பை அடுத்த வேலைக்கு அப்ளிகேஷன் போட (sincerely) பயன்படுத்துவதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


4. இன்டெர்நெட்டில் தற்போது சுமார் 500 பில்லியன் GB அளவுக்கு data கொட்டிக் கிடப்பதாக மதிப்பிட்டு இருக்கிறார்கள். விலை குறைந்து போச்சுன்னு டபுள் டிஜிட் மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா வாங்கி நாம இஷ்டத்துக்கு சுட்டுத் தள்ளிய ஃபோட்டோக்களும், வீடியோக்களும் இதில் சேர்த்தி.


5. இன்னும் சில மாதங்களில் Unix Operating System தனது 40-ஆவது பிறந்த நாளை கொண்டாடப் போகிறது. நம்ம லினக்சுக்கு சுமார் 18 வயது ஆகப்போகிறது. மேஜர் ஆகப்போகும் லினக்சுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!


6. Redhat ஸ்பான்சர் செய்யும் ஃபெடோரா(Fedora) லினக்ஸ் புதியதாக Fedora 11 பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 20 நொடியில் booting ஆக முயற்சிப்பது, default ஃபைல் சிஸ்டமாக புதிய ext4, ஓப்பன் ஆபீஸ் 3.1, KDE 4.2.2 ஆகியவை குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில சிறப்பு அம்சங்கள். செல்லப் பெயர் Leonidas.

7. V1*GRA வாங்கலியோ.. இப்படி இதை வாங்கு. அதை வாங்குன்னு அழையா விருந்தாளியா வந்து தொல்லை கொடுக்கும் குப்பை ஈமெயில்களைத்தான் Spam என்கிறார்கள். மைக்ரோசாஃப்ட் தன் அறிக்கையில் உலகின் மொத்த ஈமெயிலில் 97 சதவீதம் spam என்று சொல்கிறது. அவ்வளவு ஒன்னும் என் inbox-க்கு வரலியேன்னா அதுவும் சரிதான். Mail server-லியே Spam filter வைத்து அதிகபட்சம் ஸ்பா

முத்தான மூன்று I.T செய்திகள்!


கணினிக்கு பிராசஸர் என்றாலே இன்டெல்தானா?

AMD பிராசஸரும் மார்கெட்டில் இருக்கு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்டெலுக்கு அடுத்து AMD-தான்.

AMD, இன்டெலுக்கு மார்க்கெட்டில்
tough fight கொடுப்பதால்தான் ஏதோ நீங்களும், நானும் கணினி வாங்க முடியுது.

இல்லாட்டி
நோஞ்சான் பிராஸசரை, அநியாய விலைக்கு வாங்க வேண்டும்.

அதனால்தான், AMD-யை நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பெரிய Thanks சொல்லனும்.

சரி! இப்ப எதுக்கு AMD-யை இழுக்கனும்.
AMD கம்பெனி ஆரம்பித்து 40 வருடம் ஆகிவிட்டது. Happy Birthday AMD!

அடுத்த 40 வருடத்தில் AMD-யோ இன்டெலோ இருக்குமான்னு சொல்லவே முடியாது. அவ்வளவு வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.


2.
முக்கி முனகி இப்பத்தான் முதல் முறையாக desktop மார்கெட்டில் 1 சதவீதம் பங்கை லினக்ஸ் அடைந்திருக்கிறது என்று Net Applications என்ற கம்பெனி மதிப்பிட்டு இருக்கிறது.


இலவசமாக கொடுத்தே இந்த நிலைமை. அப்ப லினக்ஸ் அவ்வளவுதானா?

இதை ஆயிரக்கணக்கான சர்வர்களில் லினக்ஸ் மட்டுமே வைத்துக்கொண்டு சர்ச், ஜீமெயில், மேப்ஸ்னு செமையா அமர்க்களம் செய்துகொண்டு,
மற்ற கம்பெனிகள் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் கூகிள் கிட்டே போய் கேளுங்க.

3.
இந்த எழவு வைரஸ் எப்படிதான் வந்துதோ என்று விஷயம் தெரியாமல் தலையில் அடித்துக் கொள்பவர்களுக்கு இனிப்பான செய்தி.

சாதா சிடி, டிவிடி தவிர வேறு எந்த removable media-விற்கும் விண்டோஸ் 7-லிருந்து autorun வசதி default-ஆக கொடுக்கப் போவதில்லை என்று மைக்ரோசாஃப்ட் சொல்லியிருக்கிறது.

இந்த autorun வசதியை வைத்துக் கொண்டு தன் சந்ததியை இஷ்டத்துக்கு பெருக்கிக் கொண்டு கும்மாளம் அடித்த
வைரஸ், மால்வேர், ஸ்பைவேர்லாம் தங்களுக்கு வரப்போற சோதனையை நினைத்து ரொம்பதான் நொந்து போயிருக்கும்.

No comments:

Post a Comment