கால நகர்வில்
சிதைந்து போன
ஒற்றையடிப் பாதை.
நீண்ட தொடராய்.
பக்கமெல்லாம் முட்புதரும்
பாம்புப் புற்றும்.
ஆங்காங்கே
சிதறிக்கிடக்கும் பிணங்கள்.
நாயின் ஊளை
செவிகளை தாக்கி
திகிலை ஊட்டி -என்
நகர்வைத் தடுமாற வைக்கும்.
அக்கம் பக்கம் பார்த்து
திரும்பிப் பார்க்கிறேன்.
நான் மட்டும் தனிய.